பல திரைப்படங்களில் பல வேடங்களில் நடித்து பல விருதுகளை வென்றவர் மூத்த இந்திய நடிகர் ஆஷிஷ் வித்யார்த்தி.
தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், பெங்காலி ஆகிய மொழிகளில் நடித்துள்ளார்
இவர் இலங்கையின் சுற்றுலாத் துறைக்கு ஆதரவளிக்கும் சிறப்புப் பணிக்காக இலங்கை வந்துள்ளார்.
இலங்கையில் சுற்றுலாத்துறையை ஊக்குவிப்பதற்காகவும் 2023 இல் இலங்கைக்கு அதிகளவிலான சர்வதேச சுற்றுலாப் பயணிகளை ஊக்குவிப்பதற்காகவும் இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு பணியகத்தால் அவர் இலங்கைக்கு அழைக்கப்பட்டார்.
இலங்கைக்கான தனது சுற்றுப்பயணத்தை ‘லெட்ஸ் லங்கா’ என்று அழைத்த ஆஷிஷ் வித்யாரதி இலங்கைக்கு வந்தபோது சமூக வலைத்தலங்களில் ஒரு பதிவை ஏற்கனவே பகிர்ந்துள்ளார்.