பாணந்துறை – பின்வத்தையில் சொகுசு வாகனத்திற்குள் வைத்து சுட்டுக்கொல்லப்பட்ட நபரின் சடலம் இன்று காலை கண்டெடுக்கப்பட்டுள்ளது.
காரொன்றில் பயணித்துக் கொண்டிருந்த போது அவர் மீது அடையாளம் தெரியாத ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர் .
இதேவேளை அம்பலாங்கொடை – குலிகொட பகுதியிலும் துப்பாக்கிப் பிரயோக சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இதில் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.