இன்றைய வானிலை

2 years ago
Sri Lanka
(430 views)
aivarree.com

இலங்கையின் 08 மாவட்டங்களுக்கு ஓரளவு பலத்த மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

நாட்டின் கிழக்குப் பகுதிகளில் இன்று மற்றும் நாளை மழையுடனான வானிலையில் சிறிது அதிகரிப்பு எதிர்பார்க்கப்படுவதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.

கிழக்குஇ ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை, மாத்தளை மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் மழை பெய்யக்கூடும்.

பிற இடங்களில் பிற்பகல் அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை எதிர்பார்க்கப்படுகிறது.

கிழக்கு மாகாணத்திலும், காலி, மாத்தறை, இரத்தினபுரி, களுத்துறை, மாத்தளை மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும்.