மஹாவலி நீர்முகாமைத்துவ செயலகம் வழங்கும் உறுதிப்பாட்டின் அடிப்படையிலேயே இன்று மின்வெட்டை அமலாக்குவதா? இல்லையா? என்பது தீர்மானிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை மின்சார சபையின் தலைவர் நலிந்த இளங்கக்கோண் இதனைத் தெரிவித்துள்ளார்.
தேசிய நீர்த்தேக்கங்களில் இருந்து மேலதிக நீர் விநியோகிக்கப்பட்டதால், கடந்த 2 தினங்களாக மின்வெட்டு அமுலாக்கப்பட்டிருக்கவில்லை.
எனினும் இன்று மேலதிக நீர் வழங்கப்படுமா? என்பது இன்னும் உறுதியாகவில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.