இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று ராய்ப்பூர் மைதானத்தில் நடைபெறுகிறது.
நியூசிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது.
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி கடந்த 18ம் திகதி நடைபெற்றது.
இந்நிலையில் இன்றைய போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இந்திய அணி தலைவர் ரோஹித் சர்மா முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.
எவ்வாறாயினும் நாணய சுழற்சியில் வென்றதன் பின்னர் அணி என்ன தீர்மானத்து என்பதை ரோஹித் சர்மா மறந்துவிட்டார்.
சிறிது தாமதமாகி முதலில் பந்துவீசுவதாக அவர் அறிவித்தார்.
ஆனால் இரவில் பந்துவீசி அனுபவம் பெறும் வகையில் முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்யவே இந்திய அணி முன்னதாக தீர்மானித்திருந்ததாக தெரிவிக்கப்படகின்றது.
இதனால் இன்றைய போட்டி மிகுந்த எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.