இலங்கை தம்மிடம் பெற்றுள்ள கடன்களை மறுசீரமைப்பு செய்ய இணக்கம் தெரிவித்து அதன் உறுதிப்பாட்டை இந்தியா சர்வதேச நாணய நிதியத்துக்கு தெரியப்படுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
இந்த நிலையில் இலங்கைக்கு விரைவில் நல்லச் செய்தி ஒன்று கிடைக்கும் என்று சீனாவும் அறிவித்துள்ளது.
இலங்கை வந்துள்ள சீனாவின் பிரதி அமைச்சர் ச்சென் சோ தலைமையிலான தூதுக்குழு பிரதமர் தினேஸ் குணவர்தனவை சந்தித்திருந்தது.
இதன்போது, சீனா இலங்கையின் கடன் மறுசீரமைப்பு கோரிக்கையை சாதகமாக பரிசீலிப்பதாக அந்த குழு தெரிவித்துள்ளது.
மேலும் விரைவில் சீனாவிடம் இருந்து இலங்கைக்கு நல்ல செய்தி ஒன்று கிடைக்கும் என்றும் சீனாவின் பிரதியமைச்சர் குறிப்பிட்டுள்ளார் என்று பிரதமர் அலுவலக செய்தி அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.