இந்தியாவில் முதன்முறையாக நாசி கொவிட் தடுப்பு மருந்து கண்டுப்பிடிப்பு

2 years ago
World
(509 views)
aivarree.com

இந்தியாவில் முதன்முறையாக நாசி கொவிட் தடுப்பு மருந்து அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

iNCOVACC எனப்படும் தடுப்பு மருந்து சொட்டு வடிவில் கொடுக்கப்படுகிறது.

இது இந்தியாவின் முன்னணி மருந்து நிறுவனமான பாரத் பயோடெக் மூலம் தயாரிக்கப்பட்டது

இந்த தடுப்பு மருந்து நாசி துவாரம் மற்றும் சுவாசக் குழாயின் மேல் பகுதியில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் திறன் உள்ளதாக கூறப்படுகிறது.

இந்தியாவில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் இந்த தடுப்பு மருந்தின் இந்திய விலை படி 800 ரூபாய்.

இது இலங்கை விலையின் படி சுமார் 3,600 ரூபாய்.

கோவிட் நோயை உண்டாக்கும் வைரஸ் பெரும்பாலும் மூக்கு வழியாக உடலுக்குள் நுழைகிறது.

இதன் காரணமாக மூக்கு வழியாக வழங்கப்படும் iNCOVACC போன்ற தடுப்பு மருந்து மிகவும் வெற்றிகரமான முடிவுகளை அடைய முடியும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.