நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேல், சப்ரகமுவ, வடமத்திய, வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி, நுவரெலியா மற்றும் மன்னார் மாவட்டங்களிலும் பிற்பகல் அல்லது இரவு வேளையில் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.
சப்ரகமுவ மாகாணத்திலும் களுத்தறை, காலி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில் சுமார் 75 மில்லி மீற்றர் வரையிலான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும்.
கிழக்கு மாகாணத்தின் கரையோரப் பகுதிகளில் சிறிதளவு மழை பெய்யக்கூடும்.
இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.