ஆசிரியர் இடமாற்றங்கள் – கல்வியமைச்சின் புதிய அறிவிப்பு

2 years ago
Sri Lanka
(568 views)
aivarree.com

2022 ஆம் ஆண்டில் ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட தற்காலிக இடமாற்றங்கள் எதிர்வரும் மார்ச் 24 ஆம் திகதிக்கு அப்பால் நீடிக்கப்பட மாட்டாது என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த இடமாற்றங்கள் 2022 ஆம் ஆண்டு காலப் பகுதியில் தொற்றுநோய் மற்றும் நெருக்கடியான சூழ்நிலைகளை கருத்திற் கொண்டு ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டிருந்தது.

கடந்த ஆண்டு நெருக்கடியான காலகட்டத்தில், பயணம் மற்றும் போக்குவரத்தில் உள்ள சிரமங்களைக் கருத்தில் கொண்டு, ஆசிரியர்களுக்கு நிபந்தனை நிவாரணம் வழங்க கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்தது.

அதன்படி ஆசிரியர்கள் அவர்கள் வசிக்கும் இடத்திற்கு அருகில் உள்ள பாடசாலைகளுக்கு தற்காலிமாக இடமாற்றம் செய்யப்பட்டிருந்தனர்.

எவ்வாறெனினும் இந்த இடமாற்ற நியமனங்கள் மார்ச் 24 க்கு அப்பால் நீடிக்கப்பட மாட்டாது என கூறியுள்ள கல்வி அமைச்சு, இது தொடர்பான விரிவான அறிவிப்பு சம்பந்தப்பட்ட மாகாண மற்றும் வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கு அறிவிக்கப்படும் என்றும் கூறியுள்ளது.