பல தொழிற்சங்கங்கள் மற்றும் வெகுஜன அமைப்புக்கள் இலங்கை அரசாங்கத்தின் மனிதாபிமானமற்ற நடவடிக்கைகள் மற்றும் கொள்கைகளுக்கு எதிராக நாடளாவிய ரீதியில் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளன.
ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய அகில இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் இதனை தெரிவித்துள்ளார்
எதிர்வரும் பெப்ரவரி மாதம் 09 ஆம் திகதி இந்த போராட்டத்தை நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார்.
இதேவேளை இலங்கை மக்களால் அதிகளவான வரிகள் செலுத்தப்படுகின்ற போதிலும் பெறப்படும் நன்மைகள் தொடர்பில் பல்கலைக்கழக ஆசிரியர் சங்க சம்மேளனத்தின் தலைவர் பேராசிரியர் ஷ்யாமா பன்னெஹேகா கவலை வெளியிட்டுள்ளார்.