அமைச்சு பொறுப்புகளில் இருந்து விலகிய மகிந்த அமரவீர

2 years ago
Sri Lanka
(424 views)
aivarree.com

புதிய அமைச்சர்கள் சிலரை ஜனாதிபதி இன்று நியமிக்கவுள்ள நிலையில், அமைச்சர் மகிந்த அமரவீர இரண்டு அமைச்சுப் பொறுப்புகளில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

இதன்படி அவர் வனஜீவராசிகள் மற்றும் வனவளபாதுகாப்பு அமைச்சுப் பொறுப்புகளில் இருந்து விலகியுள்ளார்.

ஆனால் அவர் விவசாய அமைச்சராக தொடர்ந்தும் நீடிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சர்  மகிந்த அமரவீர வகித்த வனவள பாதுகாப்பு மற்றும் வனஜீவராசிகள் அமைச்சு பொறுப்பு இன்னொருவருக்கு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.