அன்புக்குரியோரை தேடி 6 ஆண்டுகளாக போராடும் உறவினர்கள்

2 years ago
Sri Lanka
(525 views)
aivarree.com

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் கிளிநொச்சியில் முன்னெடுக்கும் போராட்டம் ஆறாவது ஆண்டை நிறைவு செய்தது. 

இதனை முன்னிட்டு 2190ஆவது நாளான நேற்று (20) கிளிநொச்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட உறவினர்களை உள்ளடக்கிய மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் நடத்தப்பட்டது.  

அவர்களின் அன்புக்குரியவர்கள் காணாமல் போனதற்கு காரணமானவர்களை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் (ICC) ஆஜர்படுத்துவதன் மூலம் சர்வதேச சமூகம் அடையாளம் காண வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினார்கள். 

உண்மை மற்றும் நீதிக்கான இந்த போராட்டம், 2017 பெப்ரவரி 20ஆம் திகதி கிளிநொச்சி கந்தசாமி கோவில் வளாகத்தில் ஆரம்பிக்கப்பட்டதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். 

மேலும் இதில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் எட்டு மாவட்டங்களில் உள்ள காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களை இணைத்துள்ளனர்.  

ஐக்கிய நாடுகள் சபையின் 36வது மனித உரிமைகள் பேரவையின் (UNHRC) அமர்வில் இருந்து சர்வதேச விசாரணையை வலியுறுத்தி வருகிறோம்.  

சர்வதேச சமூகம் கூட எமது அன்புக்குரியவர்களின் உண்மையான நிலையை அடையாளம் காணும் செயற்பாட்டை இழுத்தடித்துள்ளது.  

அரசுக்கான கால அவகாசத்தை நீட்டித்துள்ளனர்.  

எதிர்வரும் UNHRC அமர்வுகளிலாவது நீதி வழங்கப்பட வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

இப்போராட்டம் தொடங்கி 6 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் தற்போது ஏழாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறோம்.  

இது எங்களுக்கு ஒரு சோகமான தருணம்.  

எங்கள் அன்புக்குரியவர்களின் இருப்பிடத்தைக் கண்டறிய நாங்கள் போராடி வருகிறோம்.  

சர்வதேச சமூகம் இந்தப் பிரச்சினையை இழுத்தடிக்கக் கூடாது.  

எங்களின் துயரத்திற்கு உரிய தீர்வைக் காண அவர்கள் முன்வர வேண்டும்” என்று அவர்கள் மேலும் கூறினார்கள்.