நாட்டின் பொருளாதாரம் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று காலை பாராளுமன்றத்தில் விசேட அறிவிப்பொன்றை வெளியிடவுள்ளார்.
நாட்டின் தற்போதைய பொருளாதார நிலை மற்றும் சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தைகளின் போது
ஏற்பட்ட முன்னேற்றம் குறித்து ஜனாதிபதி இதன்போது விளக்கமளிப்பார் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், இலங்கையின் கடன் மறுசீரமைப்பிற்கு ஆதரவளிப்பதாக சர்வதேச நாணய நிதியத்திற்கு சீனா மிகவும் எதிர்பார்க்கப்பட்ட உறுதிமொழியை வழங்கியுள்ளது.
இதன் மூலம் சீனா சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து 2.9 பில்லியன் டொலர் பிணை எடுப்பு பெறுவதற்கான வழியை நாட்டிற்கு வழங்கியுள்ளது.
சீனாவின் உறுதிமொழிகள், சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து நிதியைப் பெறுவதற்கு இலங்கைக்கு உள்ள மிகப்பெரிய தடையை நீக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
இது தொடர்பில் இந்தியா மற்றும் பாரிஸ் கிளப் ஏற்கனவே தேவையான உத்தரவாதங்களை வழங்கியுள்ளன.
இதேவேளை கடனாளிகள் வழங்கிய உறுதிமொழிகளுக்கு மேலதிகமாக உலகளாவிய அமைப்பின் 15 நிபந்தனைகளை இலங்கை பூர்த்தி செய்திருப்பதால், இந்த மாதத்திற்குள் இலங்கை சர்வதேச நாணய நிதியத்தின் நிதியை பெற்றுக்கொள்ள முடியும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.