அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் யாழில் வேட்புமனு தாக்கல்

2 years ago
Sri Lanka
(434 views)
aivarree.com

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுவை அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் இன்று யாழ்ப்பாணத்தில் தாக்கல் செய்தது.

இன்று மதியம் 1 மணியளவில் யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் சட்டத்தரணி ந.காண்டீபன் தலைமையிலான குழுவினர் வேட்புமனுவை தாக்கல் செய்தனர்.

யாழ்ப்பாண மாவட்டத்தில் சகல உள்ளூராட்சிமன்றங்களிலும் போட்டியிடவுள்ளதாக சட்டத்தரணி ந.காண்டீபன்
தெரிவித்தார்.